மதுரையில் இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு சென்ற இளைஞர் மரணம்

மதுரையில் இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு சென்ற இளைஞர் மரணம்
X
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு பைக்கில் சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற வாலிபர் மதுரை அருகே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, கரிசல்குலத்தைச் சேர்ந்தவர் சங்கிலி மகன் முத்தையா( 35 ).அதே ஊரைச் சேர்ந்தவர் பாலுசாமி மகன் லட்சுமணன்( 27 ). இருவரும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த பரமக்குடிக்கு பைக்கில் சென்றனர். அவர்கள் சின்ன உடைப்பருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டடை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் முத்தையா சம்பவ இடத்திலேயே பலியானார். பைக்கை ஓட்டிச் சென்ற லட்சுமணன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

Tags

Next Story