/* */

விபத்தில் இறந்த ரூபே கார்டுதாரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்

கிருஷ்ணகிரி அருகே, விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு, காப்பீடாக ரூ.2 லட்சத்தை இந்தியன் வங்கி வழங்கியது.

HIGHLIGHTS

விபத்தில் இறந்த ரூபே கார்டுதாரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்
X

கிருஷ்ணகிரி அருகே,  இந்தியன் வங்கி ரூபே ஏடிஎம் கார்டு வைத்திருந்து, விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு,  காப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(27). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி, விபத்தில் உயிரிழந்தார். இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அகசிப்பள்ளி இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அவர் ரூபே ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

ரூபே ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்கள் விபத்தில் இறந்தால் மட்டும், காப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்காக வங்கியில் இருந்து எந்தப் பணமும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதில்லை.

அதன்படி, நவீன்குமார் விபத்தில் இறந்ததால், வாரிசுகளான அவரது தந்தை கோவிந்தன் மற்றும் தாய் கல்யாணி ஆகியோரிடம், இந்தியன் வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையை வங்கி மேலாளர் சிவரஞ்சினி, காசோலையாக வழங்கினார்.

Updated On: 1 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை