/* */

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தனியார் மயம் கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கைக்கு எதிராகவும், இரண்டு பொதுத்துறை வங்கிகளையும், ஐ.டி.பி.ஐ., வங்கியை தனியாருக்கு விற்பது, எல்.ஐ.சி.,யின் பங்குகளை விற்பது, ஒரு அரசு இன்சூரன்ஸ் கம்பெனியை விற்பது ஆகிய முடிவுகளை எதிர்த்தும் நாடு முழுவதும், 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இரண்டாம் நாளாக ஈடுபட்டிருந்தனர்.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும், கிராம வங்கிகளும் இயங்கவில்லை. அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, கிருஷ்ணகிரி பழையபேட்டை இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி ஊழியர் துணைப் பொதுச் செயலாளர் சந்தோஷ், மற்றும் பொன் மகாராஜா, அசோக்குமார், இந்தியன் வங்கி ஊழியர் சங்க செயலாளர் ராஜேந்திரன், சந்துரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் ஹரிராவ் நிறைவுரை ஆற்றினார்.

Updated On: 17 March 2021 3:11 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  3. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  4. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  5. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  6. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  8. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  9. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  10. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...