/* */

முன்னாள் அமைச்சர் வீடு, தொழிற்சாலையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

14 மணி நேர சோதனையில் ரூ .25,56,000 / - மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் , முதலீடுகள் கைப்பற்றப்பட்டது.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர்  வீடு, தொழிற்சாலையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு
X

கரூரில் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை நடத்தி விட்டு வெளியேறும் காட்சி.

கரூரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவரது தம்பி வீடு மற்றும் உதவியாளர்கள் வீடு என 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று காலை 7 மணி முதல் மேற்கொண்ட அதிரடி சோதனை 14 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்துள்ளது

முன்னாள் எம் ஆர் விஜயபாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது சகோதரர் சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும், அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவரது உறவினர்கள் உள்ளிட்ட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். 14 மணி நேர சோதனையில் ரூ .25,56,000 / - மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் , காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்க கைப்பற்றப்பட்டன .

இதில் கரூரில் உள்ள அமைச்சரின் தம்பி சேகர் வீட்டில் மட்டும் ரூ. 16 லட்சமும், சென்னை மற்றும் பிற இடங்களில் 96000 கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து கரூரில் 14 மணி நேரம் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நிறைவு பெற்றது.

Updated On: 22 July 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை