/* */

காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்

காணும் பொங்கல் நாளில் தடை உத்தரவால் கன்னியாகுமரி களையிழந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

HIGHLIGHTS

காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்
X

கொரோனா கட்டுப்பாடுகளால், காணும் பொங்கல் நாளில் குமரி களையிழந்து காணப்பட்டது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், முக்கடல் சந்திக்கும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் அடைக்கப்பட்டு உள்ளது.

தை பொங்கலின் மறுநாளான காணும் பொங்கல் அன்று, சபரிமலை மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கன்னியாகுமரியில் கூடுவதோடு, சூரிய உதய காட்சியை கண்டு ரசிப்பார்கள்.

இதனிடையே தற்போது கன்னியாகுமரி சுற்றுலா தலம் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதும் பேரிகார்டு கொண்டு அடைந்துள்ள போலீசார், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Updated On: 15 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...