/* */

அதிவேகம் - 207 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல்

குமரியில், அதிக பாரம் ஏற்றி அதிவேகம் காட்டிய 207 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, 5 லட்சத்து 27 ஆயிரத்து 825 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அதிவேகம் - 207 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல்
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள், அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில், அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, போலீசார் இன்று மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், ஒரேநாளில் 207 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 லட்சத்து 27 ஆயிரத்து 825 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஒருநாள் சோதனையில் 207 வாகனங்கள் சிக்கி இருக்கும் நிலையில், விபத்துகளை தடுக்கும் வகையில், இது போன்ற சோதனைகளை தீவிரப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Updated On: 2 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்