/* */

பொதுமக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பு பிடிபட்டது

சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டினுள் விட்டனர்.

HIGHLIGHTS

பொதுமக்களை அச்சுறுத்திய  மலைப்பாம்பு பிடிபட்டது
X

பிடிபட்ட 10 அடி நீளமுள்ள பாம்பு 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட கேகே நகர் பகுதியில் தோவாளை ஊராட்சிக்கு குடிநீர் வழங்குகின்ற நல்லதண்ணீர் குளம் உள்ளது. இக்குளத்தின் அருகே செல்லும் தோவாளை - மாதவலாயம் சாலையின் கரையோரமாக சென்ற அப்பகுதியை சார்ந்த சிலர் குளத்தின் கரையோரமாக நெளித்தப்படி பாம்பு ஒன்று கிடப்பதைக் கண்டனர்.

பொதுமக்களை கண்டதும் சீரிய மலைப்பாம்பு பொதுமக்களை நெருங்க விடாதபடி அச்சுறுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வனதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் தலைமையிலான வனகாப்பாளர்கள் மலைபாம்பினை பிடித்தனர்.

தொடர்ந்து 10 அடி நீளமுள்ள பாம்பினை அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர், பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற இப்பகுதியில் மலைப்பாம்பு கிடந்தது பொதுமக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து