/* */

அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசிகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம்கள் அமைக்கபட்டும் , வீடுகள் தோறும் சென்றும் சுகாதாரத்துறை தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பெரும்பாலோனோர் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த முகாமில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு என இருவகையான தடுப்பூசிகளும் இங்கு மட்டும் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாம் நிலை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வருகை தரும் நிலையில், கடந்த 2 நாட்களாக தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக இங்கு செலுத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எப்போது சென்றாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு செல்லும் பொதுமக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இந்நிலையை தவிர்க்க தடுப்பூசிகளை தடையின்றி செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 28 Sep 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?