/* */

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு மக்கள் கருத்து கேட்பு தேவையா? இபிஎஸ் கேள்வி

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இடைக்கால அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.

HIGHLIGHTS

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு மக்கள் கருத்து கேட்பு தேவையா?  இபிஎஸ் கேள்வி
X

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய  எடப்பாடி பழனிச்சாமி.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் அடுத்த பாலு செட்டி சத்திரம் பகுதியில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் , தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கூட்டத்தில் பேருரையாற்றினார்.

கூட்டத்தில் ஆரம்பம் முதலில் திமுகவின் 14 மாத ஆட்சியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மெல்ல மெல்ல திமுக அரசு முடக்கியது.

தற்போது அனைத்து பகுதிகளிலும் வீட்டு வரியை உயர்த்தி உள்ளது பொதுமக்களுக்கு பெரும் இந்நிலை ஏற்படுத்தி உள்ளது. உரிமையாளர்கள் கடை உரிமையாளர்கள் மாதந்தோறும் திமுக அரசுக்கு மொய்யாக வழங்குகின்றனர் என குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழக இளைஞர்களை ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டம் சீர் அழித்து வருவதாகவும் இதனை முற்றிலும் தடை செய்ய கோரி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், திமுகவின் கூட்டணி கட்சிகளும் வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போது வரை இதனை செயல்படுத்தவில்லை.

இதற்கு மாற்றாக பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்தி அதன் அடிப்படையில் தடை செய்யப்படும் என அறிவித்தது கேலிக்கூத்தாக உள்ளது.

சாதாரண பொது மக்களிடம் கேட்டால் கூட சூதாட்டத்தை வேண்டாம் என்று கூறி வரும் நிலையில் சூதாட்ட நிறுவனத்தில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு இதனை தடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என கடும் குற்றம் சாட்டினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பழனி, காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் அத்திவாக்கம் ரமேஷ் தங்க பஞ்சாச்சரம், மாமன்ற, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Aug 2022 4:53 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  9. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்