/* */

விதிகளை மீறி செயல்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை

அரசு விதிகளை மீறி பணிபுரிந்த வெளியாட்கள் 4 பே மீது வழக்குபதிவு செய்ய டாஸ்மாக் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது

HIGHLIGHTS

விதிகளை மீறி  செயல்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை
X

காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அரசு மால்ஷாப் (மதுபானக்கடை)

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக ரயில்வே சாலையில் 4053 எண் கொண்ட மால் ஷாப் இயங்கி வருகிறது.

இக்கடையில் மேற்பார்வையாளராக சங்கர் என்பவரும் விற்பனையாளராக மோகனசுந்தரம் , சக்திவேல் மற்றும் அருள் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இக்கடையில் நிர்வாக விதிகளுக்குப் புறம்பாக வெளியாட்கள் பணிபுரிந்து வருவதாக காஞ்சிபுரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தொடர்ந்து புகார்கள் சென்றன..

இதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு பலமுறை எச்சரித்தும் நிர்வாகத்திற்கு புறம்பாக வெளி நபர்களை வேலைக்கு வைத்து விதிமீறலில் ஈடுபட்டதாக மேற்கண்ட நான்கு நபர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட மேலாளர் சிவன் விஷ்ணு , காஞ்சி மாவட்ட காவல் ஆய்வாளருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்..ஏற்கெனவே தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் ஊழியர்கள் மீது கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில் அரசு நியமித்த நபர்கள் தினக்கூலிக்கு வெளியாட்களை வேலையாட்களை வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.


Updated On: 9 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு