/* */

கொரோனாவை மறந்த மக்கள்: புடவை வாங்க அலைமோதும் கூட்டம்

கண்டு கொள்ளாத பெருநகராட்சி ஊழியர்கள்.

HIGHLIGHTS

கொரோனாவை மறந்த  மக்கள்: புடவை வாங்க அலைமோதும் கூட்டம்
X

சுபமுகூர்த்த தினமான இன்று காஞ்சிபுரம் பட்டு ஜவுளி கடைகள் பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவது நோய்த் தொற்று பரவல் காரணமாகவும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர், தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் நிலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி பட்டு சேலை வாங்க வெளிமாவட்ட வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இன்று கூடியுள்ளனர்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் பட்டு சேலை கடைகளில் கொரோனா விதிமுறைகளை ஒன்றை கூட கடைப்பிடிக்காமல் ஒட்டுமொத்தமாக கூடி நோய் பரப்பும் செயலை செய்து வருவது வருத்தம் அளிக்கிறது சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இச் செயலை காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஊழியர்கள் கண்டும் காணாமல் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு அறிவுரை வழங்கி காஞ்சிபுரம் காந்தி சாலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க விரைவாக கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சாலையில் முக கவசம் அணியாதவர்களை மடக்கி 100 ரூபாய் அபராதம் விதிக்கும் பெருநகராட்சி ஊழியர்கள், சாலையோர வியாபாரிகளை மிரட்டும் பெருநகராட்சி ஊழியர்கள் இது போன்ற கடைகளில் அபராதம் விதிக்க தயங்குவது ஏன் என கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Updated On: 22 April 2021 12:08 PM GMT

Related News