/* */

நின்றோம், வென்றோம் என ஊரக உள்ளாட்சி தேர்தலில் சாதனை படைக்க வேண்டும்

நின்றோம், வென்றோம் என ஊரக உள்ளாட்சி தேர்தலில் சாதனை படைக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

HIGHLIGHTS

நின்றோம், வென்றோம் என ஊரக உள்ளாட்சி தேர்தலில் சாதனை படைக்க வேண்டும்
X

 ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் தங்கம் தென்னரசு.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் உத்திரமேரூர் , காஞ்சிபுரம். சட்டமன்ற தொகுதிகளின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 67 வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரான தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் வேட்பாளர்களூக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் பேசிய தங்கம் தென்னரசு , நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நின்றோம் ..வெற்றியை பெற்றோம் என சாதனை படைக்க வேண்டும். மேலும் திமுகவின் தலைவரின் நான்கு மாத சாதனைகளை கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் பெற்றது போல் இருக்க கடின உழைப்பை வெளிபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார் , குமணன், குமார், சேகர், ஞானசேகரன் , தேர்தல் பொறுப்பாளர்கள் சிவிஎம்சேகர், மலர்மன்னன், தமிழ்செல்வன் மற்றும் நகர் செயலாளர்கள் சன்பிராண்ட் ஆறுமுகம், பாரிவள்ளல் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வார ராசிபலன் 02 முதல் 08 ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  2. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  4. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  5. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...
  6. வீடியோ
    Vani Bhojan -யை Rambha என கிண்டல் !! #anjaamai #anjaamaimovie...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை:...
  8. இந்தியா
    என்டிஏ அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்! பல...
  9. லைஃப்ஸ்டைல்
    வெள்ளை முள்ளங்கியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. வீடியோ
    NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet #vanibhojan...