/* */

இப்பபோலவே... எப்பவுமே பெட் காலியா இருக்கணும்... அமைச்சர் தா.மோ.அன்பரசன்

புதிய 200 படுக்கைகள் வசதிகள் கொண்ட கோவிட் கேர் மையத்தினை திறந்த ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்..

HIGHLIGHTS

இப்பபோலவே... எப்பவுமே பெட் காலியா இருக்கணும்... அமைச்சர் தா.மோ.அன்பரசன்
X

 200 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை அமைச்சர் த .மோ. அன்பரசன் இன்று  துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் புதியதாக 200 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் த .மோ. அன்பரசன் இன்று ரிப்பன் வெட்டி , குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்.

புதிய மையத்தை திறக்கும் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், இப்போ போல .. எப்பவும் பெட் காலியாகவே இருக்கணும் என அனைவரும் வேண்டுமாறு கூறியதும் நகைச்சுவையுடன் அனைவரும் சிரித்து அவ்விடம் சிறுது நேரம் கலகலப்பானது..

எப்பவும் மருத்துவமனை வளர்ச்சி இருக்க வேண்டும் என எண்ணும் நிலையில் இதுபோன்ற பேரிடர் காலத்தில் மக்கள் எவ்வித நோய் தொற்றும் இல்லாமல் சுகாதாரமாக இருக்கவேண்டும் எனக் கூறியதாக கூறி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

அதன்பின் புதிய கோவிட் கேர் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர்‌ , எழிலரசன் , கு.செல்வப்பெருந்தகை ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தனியார் தொழிற்சாலை கம்பெனி சார்பாக ரூபாய் ஒரு கோடியே 40 லட்சத்து வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் கொடியசைத்து அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா , மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு