/* */

காஞ்சிபுரம்: தங்க பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எம்பெருமான் வீதி உலா

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜர பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் 5ம் நாள் காலை தங்க பல்லக்கில் எழுந்தருளி வலம்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: தங்க பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எம்பெருமான் வீதி உலா
X

வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் காலை நாச்சியார் அலங்காரத்தில் தங்க பள்ளத்தில் வீதி உலா.

வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழாவில் முக்கிய விழாவான கருட சேவை விழா ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமர்சையாக பக்தர்கள் புடை சூழ ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதர் நகரின் பல்வேறு வீதிகளில் உலா வந்தார். இன்று ஐந்தாம் நாள் காலை நாச்சியார் திருக்கோலத்தில் தங்கப் பள்ளத்தில் எழுந்தருளி நகரின் சிறு வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

எம்பெருமான் உறங்கும் சமயம் "முரன்" என்னும் ஒரு அசுரன் அவரை அழிக்க வருகின்றான். அப்போது எம்பெருமானின் திருமேனியிலிருந்து ஒரு சக்தி வெளிப்பட்டு அவனை அழித்தது. அந்த சக்திதான் "மோஹினி அவதாரம்". தேவர்களை ரட்சிக்க அவர்களுக்கு அமுது கிடைக்க எடுத்த அவதாரமும் மோஹினி அவதாரமே. ஆக தன்னை ரட்சித்துக் கொள்ளவும், தேவர்களை ரட்சிப்பதற்காகவும் எடுத்த ரட்சணத்தின் வடிவம்தான் "மோஹினி அவதாரம்". இன்று நம்மையெல்லாம் ரட்சித்து நமக்கும் வைகுண்ட பேறு உய்ய, அரங்கன் மோஹினி அவதாரத்தில் காட்சித் தருகின்றார் என கூறப்படுகிறது.

Updated On: 17 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்