/* */

குத்தாட்டம் ஆடி தொண்டர்களை மகிழ்வித்து காஞ்சி எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி 9வார்டு பகுதியில் இளைஞர்களோடு நடனமாடி மகிழ்வித்தவாறே வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

குத்தாட்டம் ஆடி தொண்டர்களை மகிழ்வித்து காஞ்சி எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
X

9வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் மாகலட்சுமிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து போது

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னும் சில தினங்களே பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்க அனைத்து கட்சியினரும் காலை 6மணி முதலே தொண்டர்கள் படை சூழ வார்டுகளில் வலம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 9 வார்டு பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் யு. மாகலட்சுமி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்குகள்‌சேகரிக்க காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வருகை புரிந்தார்.

ஏகாம்பரநாதர் சன்னதி தெரு பகுதியில் இருந்து தொண்டர்கள் , இளைஞர்கள் , மகளிர் அணியினர் என பல்வேறு தெருக்களில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இளைஞர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் குத்தாட்டம் நடனமாடி உற்சாகப்படுத்தி அனைவரும் இணைந்து வாக்கு சேகரித்தனர்.

படவிளக்கம் : 9வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் யு.மாகலட்சுமிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து போது..

Updated On: 13 Feb 2022 5:00 PM GMT

Related News