/* */

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கண்ணன் அவதார திருவிழா உரியடியுடன் துவக்கம்

பாண்டவ பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீயதுகுல வேணுகோபால பஜனை மண்டலத்தின் சார்பில் கண்ணன் அவதார விழா கொண்டாடப்படுகிறது

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கண்ணன் அவதார திருவிழா உரியடியுடன் துவக்கம்
X

ஸ்ரீ கண்ணன் அவதார திருவிழா முதல் நாளில் சிறப்பு தீபாராதனையும் ஸ்ரீ வெண்ணைத்தாழி அலங்காரத்தில் கண்ணன்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பாண்டவ பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் ஸ்ரீ யதுகுல வேணுகோபால பஜனை மடம் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கண்ணன் அவதார விழா துவங்கி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று காலை சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கப்பட்டு 18ஆம் தேதி வரை நாள்தோறும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் ஸ்ரீ கண்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

துவக்க நாளான இன்று காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருள சிறுவர்கள் உறி குத்துதலுடன் விழா துவங்கியது.

இதனை அடுத்து சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இறுதியில் இளைஞர்கள் வழக்கு மர உச்சியில் கட்டப்பட்ட சிறப்பு பரிசு பொருட்களை கைப்பற்றிய பின் வீதி உலா துவங்கியது.

ஸ்ரீ கண்ணன் அவதார விழா துவக்க நிகழ்ச்சியில் வான வேடிக்கை வழக்கு மரம் ஏறுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ கண்ணன் அருளை பெற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

நாள்தோறும் இரவு நரசிம்ம அலங்காரம் , பரமபதநாதன் அலங்காரம் , ராம அலங்காரம் , குதிரை வாகனம் , பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் பசு கன்றுடன் எழுந்தருள், ஸ்ரீ ருக்மணி திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்வு நடைபெற உள்ளது.

Updated On: 7 Sep 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு