/* */

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் தலைமையில் அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்றனர்.

HIGHLIGHTS

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ..
X

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி வாசித்த போது.

உலகம் முழுவதும் இன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாகவே முதியோர்கள் இக்காலத்தில் பெரும் சிரமத்தை கண்டு வருகின்றனர்.

தற்போது அதிக அளவில் முதியோர்கள் பெருத்த சிரமத்தை கண்டு வருவதாகவும் தனது மகன் மற்றும் தங்களை அலட்சியப்படுத்துவதாகவும், இதனை தாங்காது வீட்டை விட்டு வெளியேறியும் அனாதைகளாகும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து வருகின்றனர்.

இது மட்டும் இல்லாத இவர்களிடமிருந்த சொத்துக்கள் பணங்களை பறித்துக் கொண்டு தங்களை நிக்கதியில் தவிக்க விட்டு வருவதாகவும் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் மனு அளித்து அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரி வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் தற்போது முதியோர் பராமரிப்பு இல்லங்கள் அதிக அளவில் உருவாகி அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது இந்நாளில் அரசு துறை அலுவலர்கள் அனைவரும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் , முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனம் மற்றும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும் அவர்களுக்கு உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் ,

பொது இடங்களான மருத்துவமனை வங்கி பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுமைகள் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி வாசிக்க நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , மாவட்ட சமூக நல அலுவலர் கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்பாட்டினை காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Updated On: 16 Jun 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு