/* */

ஐயங்கார்குளத்தில் புதிய நூலக கட்டிடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை

ஐயங்கார்குளம் கிராம ஊராட்சி நிர்வாகம் தானமாக நிலம் அளித்த நிலையிலும் வாடகை கட்டிடத்தில் தான் தற்போது நூலகம் இயங்கி வருகிறது.

HIGHLIGHTS

ஐயங்கார்குளத்தில் புதிய நூலக கட்டிடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை
X

கோப்பு படம் 

காஞ்சிபுரம் அடுத்த பாலாற்று கரையோரம் அமைந்துள்ளது ஐயங்கார் குளம் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி, தனியார் பொறியியல் , பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாவட்ட நூலகத்துறை சார்பில் வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

மேலும் கிராம ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவு, கிராம ஊராட்சிக்கு என ஒதுக்கப்பட்ட ஓஎஸ்ஆர் நிலத்தினை நூலக துறைக்கு, தான செட்டில்மென்ட் பதிவு செய்து அளித்துள்ளனர்.

இன்று புத்தக தின விழா கொண்டாடப்படும் நிலையில் புதிய கட்டிடம் கட்டி அனைத்து நூல்களும் வைக்கப்பட்டு அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் , இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் செயல்பட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம வாசகர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 23 April 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு