/* */

காஞ்சியில் கொரோனா விதிமீறல்: 11 பட்டு மையங்களுக்கு அபராதம்

காஞ்சிபுரம் பட்டு சேலை விற்பனை நிலையங்களுக்கு கொரோனா விதிமுறை மீறியதாக ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சியில் கொரோனா விதிமீறல்: 11 பட்டு மையங்களுக்கு அபராதம்
X

காஞ்சிபுரத்தில் துணை ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் தலைமையிலான குழு ஆய்வில் ஈடுபட்டனர்.

சுபமுகூர்த்த தினமான நேற்று பட்டு நகரம் காஞ்சிபுரத்தில் காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டு சேலை வாங்குவதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்தனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி, முகக் கவசங்கள் அணிந்த பின்புதான் வணிக நிறுவனங்களுக்குள் செல்லவேண்டும் என அறிவுறுத்தியும் அதை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

பல்வேறு பட்டு சேலை நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதியில் துணை ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை கடைப்பிடிக்காத 11 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டால் நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 22 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு