/* */

காஞ்சிபுரம் குளங்களை 3வது நாளாக ஆய்வு செய்யும் மாநகராட்சி குழுவினர்

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 18 திருக்கோயில் குளங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் குளங்களை 3வது நாளாக ஆய்வு செய்யும் மாநகராட்சி குழுவினர்
X

காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையை மாநகராட்சி குழுவினர் சுத்தம் செய்தனர்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் , சைவ , வைணவ , அம்மன் திருக்கோயில்கள் நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இப் திருக்கோவிலுக்கு அருகிலேயே குளங்களும் அமைந்துள்ளது. பண்டைய காலங்களில் இத்திருக் குளங்களில் நீர் சேமிப்பது குடிநீர் ஆதாரத்திற்கு பெரிதும் உதவும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் திருக்குளத்திற்கு மழை பெய்யும் காலங்களில் மாடவீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் வழிந்தோடும் நீர் நேரடியாக திருக்குளத்திற்கு செல்லும் வகையில் கட்டமைப்பு இருந்துள்ளது.

நாளடைவில் இது போன்ற கட்டமைப்புகள் ஆக்கிரமிப்பு போய் குளங்களுக்கு நீர் செல்லும் பாதைகள் முற்றிலும் அழிந்து மறைந்து போயிருந்தது.

கடந்த 2015 முதல் பெய்து வரும் கனமழையின் போது ஆறுகளில் காற்றாற்று வெள்ளம் சென்ற நிலையில் கூட சில திருக்கோயில் குளங்களில் சிறிதளவு நீர் இருப்பு இல்லை‌ என்பது வருத்தமான செய்தியாகவே காஞ்சி நகர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இருந்தது.

தற்போது மாநகராட்சி காஞ்சிபுரம் நகரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில் திருக்குளங்களை புனரமைத்து நீர்நிலைகளாக மாற்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக்கும் பணிகளை துவக்கிட மாமன்ற கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் முடிவு செய்து அதன்படி , ஆணையாளர் கண்ணன் பணிகளை துவக்கினார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உலகளந்த பெருமாள் கோயில் , வைகுண்ட பெருமாள் கோயில், யதோத்காரி பெருமாள் கோயில் , அஷ்டபுஜம் பெருமாள் கோயில், பெரியார் நகர் காசிக்குட்டை குளம், நகரிஈஸ்வரர் கோயில் குளம் , மங்கள தீர்த்த குளம் , ரங்கசாமி குளம், முருகன் கோயில் குளம் , பவளவண்ண பெருமாள் கோயில் குளம் , வழக்கறுத்தீஸ்வரர் கோயில் குளம் , பிள்ளையார்பாளையம் திருமேற்றீஸ்வரர் கோயில் குளம், திருக்காளிமேடு சத்தியநாதீஸ்வரர் திருக்கோயில் குளம், பஞ்சுப்பேட்டை ஓனாகாத்திஸ்வரர் குளம் , ஏகாம்பரேஸ்வரர் கோயில் கம்பா நதி குளம் , விளக்கடி கோயில் தெருவில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயில் குளம், மூத்தீஸ்வரர் கோயில் குளம் , புண்ணியகோடீஸ்வரர் கோயில் குளம் என 18 திருக்கோயில் குளங்கள் அமைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை வைகுண்ட பெருமாள் கோயில் திருக்குளத்தின் நீர் வழித்தடங்களை கண்டறிந்த அதனை சோதனை முறையில் நீர் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று மங்கல தீர்த்த குளம் உலகளந்த பெருமாள் கோயில் திருக்குளம் ரங்கசாமி குளம் உள்ளிட்ட திருக்குளங்களை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆணையர் கண்ணன் பொறியாளர் கணேசன் மற்றும் மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் கார்த்தி சுப்பராயன் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

இன்று மூன்றாவது நாளாக மாநகராட்சி பொறியாளர் குழுவினர் ரங்கசாமி குளம் நீர்வழி பாதையை முழுவதும் சுத்தம் செய்து நீர் செலுத்தி சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.

இதேபோல் யதோத்காரி திருக்குளத்தினையும் மாநகராட்சி ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு பணிகளும், அதன் பின் மாநகராட்சி செயல்பாட்டிலும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து விரைவில் திருக்குளங்கள் நிரம்பும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

Updated On: 18 Oct 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு