/* */

தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி, ஊட்டச்சத்து விதை, நாற்று வழங்கல்

இரத்த சோகை ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி,  ஊட்டச்சத்து விதை, நாற்று வழங்கல்
X

ஊட்டசத்து குறைபாடுள்ள குடும்பங்களுக்கு தோட்டம் அமைக்க விதைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி, ஊட்டச்சத்து தோட்டத்திற்கான விதை மற்றும் நாற்றுகளை ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களிடையே குறிப்பாக ஏழை எளிய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான சிறப்பு முயற்சியாக ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தேசிய குழந்தை நலத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் மூலம் இரத்தசோகை, வளர்ச்சி குன்றியவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளவர்களை கண்டறிந்து ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கப்படுகிறது. பின்னர் சரிவிகித உணவு உட்கொள்ள பயிற்சி பெற்ற சமுதாய வள பயிற்றுநர்கள் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அவர்களின் வீட்டின் பின்புறம் அல்லது வீட்டின் மாடிப் பகுதியில் அல்லது அவர்களிடம் வேறு எந்த இடத்திலும் ஊட்டச்சத்து தோட்டத்தை அமைக்க தேவையான விதைகள் மற்றும் நாற்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தக்காளி, கத்தரி, முள்ளங்கி, வெண்டை, அவரை, பூசணி, பாலக் கீரை,அரைக் கீரை, ஆகிய எட்டு வகையான நாற்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் விதைகள் மற்றும் நாற்றுகள் வளர்ப்பு குறித்த பராமரிப்பு சிற்றேடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இத்திட்டத்தினை பயனாளிகள் முழுமையாகப் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 14 Sep 2021 4:22 PM GMT

Related News