/* */

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் கையில் ராக்கி கயிறு கட்டிய மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குழந்தைகள் கையில் ராக்கி கயிறு கட்டினார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் கையில் ராக்கி கயிறு கட்டிய மாவட்ட ஆட்சியர்
X

கள்ளக்குறிச்சியில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் குழந்தைகள் கையில் ராக்கி கயிறு கட்டினார்.

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தினத்தையொட்டி சைல்டு லைன் 1098 சார்பில் நவம்பர் 14 முதல் 19ம் தேதி வரை குழந்தைகள் நண்பர்கள் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குழந்தைகள் நண்பர்கள் வார நிகழ்ச்சிகளின் தொடக்கமாக அரசு அலுவலர்களுக்கு குழந்தைகள் ரக்ஷாபந்தன் ராக்கி கயிறு கட்டினர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் குழந்தைகள் கையில் ராக்கி கட்டினார். தொடர்ந்து குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடினர். பின், குழந்தை திருமணம் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.

கலெக்டர் பேசுகையில், இந்த ஆண்டு குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இவ்வார விழா கொண்டாடப்படுகிறது.கிராமப்புறங்கள் மற்றும் பள்ளிகளில் சைல்டு லைன் குறித்தும், குழந்தை திருமணத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துதல். கிராம நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்தல்.திறந்தவெளி பிரசாரங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் வாரம் முழுவதும் நடத்தப்பட உள்ளன.

பொதுமக்கள் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.டி.ஆர்.ஓ., விஜய்பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 17 Nov 2021 10:12 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பகுதியில் அடிக்கடி பழுதாகும் நகரப் பேருந்துகள்
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி || #Selvaperunthagai...
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா: வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்துகள்!
  5. சினிமா
    தமிழ் சினிமா பாடல்களில் திருமண விழா வாழ்த்துகள்
  6. திருவள்ளூர்
    தனியா தொழிற்சாலைகளின் பேருந்து,வேன் மோதி விபத்து!
  7. லைஃப்ஸ்டைல்
    செல்ல மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. பொன்னேரி
    கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா!
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை,வெள்ளி,பணம் கொள்ளை!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!