சோழவந்தான் பகுதியில் அடிக்கடி பழுதாகும் நகரப் பேருந்துகள்
சோழவந்தான் பகுதியில், அடிக்கடி பழுதாகும் நகரப் பேருந்துகள.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு போக்குவரத்து பணிமனையில், சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மதுரை, திருமங்கலம், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளும் என, நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் சோழவந்தான் பகுதிக்கு வந்து செல்கின்றது.
இதில், பல பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் , பாதி வழியில் நின்று விடுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த வாரத்தில் மேலக்கால் புது பாலம், திருவேடகம், பள்ளிவாசல் என, பல்வேறு இடங்களில் பழுதாகி பேருந்துகள் நின்றுவிட்டது. இதனால், நடத்துனர் பயணிகளை இறங்கி அடுத்து வரும் பேருந்தில் பயணம் செய்யுமாறு கூறிய நிலையில் அடுத்த பேருந்துகள் வர அதிக நேரம் ஆனதால், பயணிகள் பலர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் உதவி கேட்டு சென்று விட்ட நிலையில் பெண்கள் மற்றும் முதியவர்கள் குழந்தையுடன் வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து , பெண்கள் சிலர் கூறும் போது, அரசு பேருந்துகளை முறையாக குறித்த நேரத்திற்கு இயக்க வேண்டும், முறையாக பராமரித்து பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும், இலவசம் என்று கூறி குறைந்த அளவு பேருந்துகளை இயக்குவதால், இரண்டு பேருந்துகளில் செல்ல வேண்டிய பயணிகள் ஒரே பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுவும், ஒரு சில பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் இருப்பதால், பயணம் செய்யும் போது பாதி வழியில் நின்று விடுகிறது. இதனால், அடுத்த பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது குறித்து, அரசும் போக்குவரத்து துறையும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்துகளை முறையாக பராமரிக்கவும் குறித்த நேரத்திற்கு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu