தனியா தொழிற்சாலைகளின் பேருந்து,வேன் மோதி விபத்து!

தனியா தொழிற்சாலைகளின் பேருந்து,வேன் மோதி விபத்து!
X
திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலைகளின் வேன் பேருந்து மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 12 பேரை மருத்துவமனையில் அனுமதி.

திருவள்ளூரில் தொழிற்சாலை வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 12 பெண்கள் காயம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் இயங்கும் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு பட்டரைப்பெருமந்தூர் பகுதியில் இருந்து சுமார் 12 பெண்கள் வேனில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

காலை வேளை, பணிக்கு செல்லும் அவசரத்தில், வேன் நின்று கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து வந்த மற்றொரு தனியார் தொழிற்சாலை பேருந்து, வேனின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில், வேனில் பயணித்த 12 பெண் தொழிலாளர்களும் அலறியபடி காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, காயமடைந்த பெண்களை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர், விபத்துக்குள்ளான வேன் மற்றும் பேருந்துகளை பறிமுதல் செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 பெண் தொழிலாளர்களும், சிறு சிறு காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேகக்கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது, சாலையின் பாதுகாப்பு விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது போன்ற அஜாக்கிரதையால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்