/* */

தொடர் மழையால் தியாகதுருகம் பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பின

தொடர் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதி தடுப்பணைகள் நிரம்பி உள்ளன.

HIGHLIGHTS

தொடர் மழையால் தியாகதுருகம் பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பின
X

தியாகதுருகம் பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் பாதி அளவிற்கு தண்ணீர் நிரம்பியது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி சில தினங்களாக, கல்வராயன் மலையில் பெய்த கனமழை காரணமாக, இரு அணைகளும் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோமுகி ஆற்றில் தோப்பூர், சோமண்டார்குடி, கள்ளக்குறிச்சி, குரூர், விருகாவூர் ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் மணிமுக்தா ஆற்றில் சூ.பாலப்பட்டு, வடபூண்டி, கொங்கராயபாளையம் ஆகிய ஊர்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம், சுற்றுவட்டார ஏரிகளுக்கு நீர் வரத்து கிடைப்பதால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Updated On: 10 Nov 2021 11:15 AM GMT

Related News