/* */

உழவர் நலத்துறை திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயனடைய வேண்டும் – கலெக்டர் பி.என்.ஸ்ரீதர்

வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் பயனடைய வேண்டும்- கலெக்டர் பி.என்.ஸ்ரீதர்

HIGHLIGHTS

உழவர் நலத்துறை திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயனடைய வேண்டும் – கலெக்டர் பி.என்.ஸ்ரீதர்
X

மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஶ்ரீதர் ஆய்வு மேற்கொண்ட போது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் வட்டம் சேந்தமங்கலம்,பாதூர், சேந்தநாடு, திருநாவலூர்,சிறுத்தனூர் ஆகிய கிராமங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஶ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநாவலூர் வட்டம் பாதூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கறவை மாடுகள், ஆடுகள், தேனீப் பெட்டிகள் மற்றும் மண்புழு தொட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத் திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளிடம் இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார். மேலும் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் காப்பீடு செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, சேந்தமங்கலம் கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் ஒரு பகுதியான துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகள் பயன்படுத்தி, அமைக்கப்பட்ட கம்பு வயலினை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சேந்தநாடு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், திருநாவலூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நேரடி விதைப்பு கருவிகளை பயன்படுத்தி சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து நெல் நேரடி விதைப்பு கருவியின் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சிறுத்தனூர் கிராமத்தில் மணிலா பயிரில் அமைக்கப்பட்டிருந்த விதைப்பண்ணை வயலை பார்வையிட்டு பணியின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்தார். மேலும் வேளாண்மை மற்றும் உழவர் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளுக்கு பயன் பெற வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.

Updated On: 4 Sep 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...