/* */

கருப்புபேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கருப்புபேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்தியஅரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்கிட வேண்டியும், கொரோனா தொற்று காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊதியமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம் மற்றும் தன்னுயிர் நீத்த செவிலியர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும்,இனிவரும் காலங்களில் தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநில தலைவர் சக்திவேல் தலைமையில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் செவிலியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 29 Jan 2021 4:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்