ஈரோடு: மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தமிழக முதல்வரால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால் அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் சுதந்திர தின விழா 15 ஆகஸ்டு 2023 அன்று வழங்கப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை செய்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் தங்கப்பதக்கமும், 50 ஆயிரம் ரூபாயும், சான்றிதழும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சைவை புரிந்த மருத்துவருக்கு 10 கிராம் தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனத்திற்கும், 10 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக சேவை புரிந்த பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தமிழக அரசின் விருதினை பெற விருப்பமுள்ள நபர்கள் 22.06.2023-க்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், ஈரோடு 11. தொலைபேசி எண்.0424 2258986 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu