தினமும் வெற்றிலை சாப்பிட்டால் இம்புட்டு நன்மைகளா..இத்தனை நாளா இது தெரியாம போச்சே!இனிமேல் சாப்பிடலாமா ...?
வெற்றிலை:
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம் வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் கடலூர் மாவட்டம் மானியம் ஆடூரில் பகுதியில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது.வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
வெற்றிலைகள் இந்திய கலாச்சாரத்தில் அதிலும் குறிப்பாக நமது தமிழக கலாச்சாரத்தில் ஆன்மிக பூஜைகள் முதல் இறப்பு வரை அனைத்திலும் முதன்மையாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருந்தது.
வெற்றிலை பல சுப காரியங்களுக்கும், குறிப்பாக வீட்டு விசேஷங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சியில் தாம்பூல தட்டில் வைப்பது தமிழர்களின் மரபு. அதுமட்டுமின்றி உண்ட பின்னர் வெற்றிலையுடன் பாக்கு-சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவது வழக்கமாகும். வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, மற்றும் சாதாரண வெற்றிலை என்ற வகைகளும் உள்ளன. கருப்பு நிறத்துடன் காரத்துடன் கம்மாறு வெற்றிலை இருக்கும். கற்பூர மணத்துடன் இருப்பது கற்பூர வெற்றிலை. இவை கொடி வகையான படியால், இதின் வேர், இலை என எல்லாவற்றிலும் மருத்துவ பலன்கள் தரக்கூடியது.
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் :
1. சிறு குழந்தைகள் ஏற்படும் கோழைக்கட்டு, அஜீரணக்கோளாறு, மல சிக்கல், பெரியோருக்கு ஏற்படும் கடுமையான தலைவலி, போன்ற பலவிதமான நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டிமைக்ரோபியல் இருப்பதால் கடுமையான இரும்பல் பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.
2. வெற்றிலையில் மருத்துவ மூலிகை இருப்பதால், பசி உண்டாக்கும், ஆஸ்துமா, அலர்ஜி, அல்சர், வாத நோய், வறட்டு இரும்பல், நுரையீரல், செரிமான கோளாறு, ஒற்றை தலைவலி, பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரக்க, என சர்வ ரோகங்களை போக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் வெற்றிலையுடன் சிறிது பாக்கு சேர்த்து சாப்பிட்டால் பல்வேறுபட்ட நோய்களும் குணமாகும்.
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்:
வலி நிவாரணம் :
பல் வலி, ஈறுகளில் வீக்கம் நீக்க, சிறிது மென்று வந்தால், வலி குறையும், சிறிது வெற்றிலை சாறுடன், வெந்நீர் கலந்து குடித்தால், வயிற்று வலி, வயிற்று மந்தம், உப்பிசம் போன்றவை விரைவில் நீங்கும். ஒற்றை தலைவலிக்கு சிறிது வெற்றிலையை ஈரமாக்கி தலையின் இருபக்கம் அல்லது ஒரு பக்கம் வைத்தால் உடனடியாக வலி குறையும். தேள் கடி விஷத்தை முறிக்க இலையுடன் 5-6 மிளகு, சிறிது தேங்காய் மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கும்.வலி நிவாரணியாக வெற்றிலை உள்ளது.
குழந்தைக்கு மல சிக்கல், அஜீரண கோளாறு நீக்கும்:
குழந்தைக்கு மல சிக்கல், அஜீரண கோளாறு நீக்கும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால், வெற்றிலை மிளகு இரண்டையும் சேர்த்து கஷாயம் போல் செய்து கொடுத்தால் அஜீரணம் நீங்கி, பசியை தூண்டும். மேலும் கை குழந்தை பால் குடிக்க முடியாமல், கோழைக்கட்டு ஏற்படும் நேரத்தில் வெற்றிலை சாறுடன் சிறிது அளவு கோரோசனை கலந்து கொடுத்தால், கோழைக்கட்டு நீங்கிவிடும், சளி, இரும்பல் ஆகியவையும் குணமாக்கும்.
தாய் பால் சுரக்க உதவும் :
தாய் பால் சுரக்க பாலூட்டும் பெண்களுக்கு அதிக பால் சுரக்க சிறிது ஆமணக்கு எண்ணெயில் வெற்றிலையை வதக்கி மார்பில் கட்டி வந்தால் தாய் பால் சுரக்கும். சில சமயங்களில் மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டு வீக்கம் ஏற்படும்போது, மண்சட்டியில் மிதமான சூட்டில் வெற்றிலையை வதக்கி மார்பகங்களில் கட்டிவந்தால் வீக்கம் குறைந்துவிடும்.
சரும பிரச்சனையை நீக்கும் :
வெற்றிலை சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. இவற்றில் உள்ள கிருமி நாசினிகள் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.இதனால் உடலுக்கு நன்மை சேர்க்கும்.
காயத்தை சரி செய்யும்:
வெற்றிலை காயங்களை ஆற்றவும் பயன்படுகிறது. வெற்றிலைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை காயத்தின் மீது தடவி, மற்றொரு வெற்றிலையை அதன் மீது வைத்து கட்டு போட வேண்டும். இப்படி செய்தால் இரண்டு மூன்று நாட்களில் காயம் குணமாகும்.
இதயத்தை பாதுகாக்கும்:
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெற்றிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நெஞ்சுவலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் வெற்றிலைச் சாறு குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.வெற்றிலையால் உடலுக்கு நன்மை தான் உண்டாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu