கிடுகிடுவென உயர்ந்தது நேந்திர வாழையின் விலை..!பவானிசாகர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

கிடுகிடுவென உயர்ந்தது நேந்திர வாழையின் விலை..!பவானிசாகர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
X
நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைப்பதால், பவானிசாகர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு :

புன்செய்புளியம்பட்டி : நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைப்பதால், பவானிசாகர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பவானிசாகர் வட்டாரத்தில் வாழை சாகுபடி

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரத்தில் பெரியகள்ளிப்பட்டி, நால்ரோடு, கொத்தமங்கலம், அம்மாபாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் நேந்திரன் ரகம், மற்றும் கதளி, ஜி-9 ரகமும் சாகுபடி செய்யப்படுகிறது.

வாழைத்தார் ஏற்றுமதி

இங்கு விளையும் வாழைத்தார்கள், அதிக அளவில் கேரளாவிற்கும், அடுத்தபடியாக மும்பைக்கும் செல்கிறது. நேந்திரன் வாழை, கேரளா மார்க்கெட்டை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.


நேந்திரன் வாழை பயிரிடும் விவசாயிகள்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருவதால், சுற்றுவட்டார விவசாயிகள் நேந்திரன் வாழை பயிரிடுவதில், அதிகம் ஆர்வம் காட்டினர்.

நடப்பு ஆண்டின் அறுவடை

நடப்பு ஆண்டுக்கான அறுவடை துவங்கி நடந்து வருகிறது. வாழை விவசாயிகள் கூறியதாவது: நேந்திரன் வாழைத்தார்களை, வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து வெட்டிச் செல்கின்றனர்.கடந்த மாதம், நேந்திரன் வாழை கிலோ, 25 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை விலை போனது.தற்போது கிலோ, 65 ரூபாய் வரை விலை போகிறது. இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
Similar Posts
புன்செய்புளியம்பட்டி பள்ளி ஆசிரியர் கைது..!
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!
போக்குவரத்து விதிமுறை மீறியதாக 1,675 வழக்குகள் பதிவு
பவானி ஆற்றில் தண்ணீர் அருவியாக கொட்டாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!
பு.புளியம்பட்டி பாலசாஸ்தா கோவில் ஆண்டு விழா..!
நீர், கல்வி, மருத்துவம்…எதுவும் அரசிடம் இல்லை: சீமான் அதிரடி பேச்சு!
மொடக்குறிச்சி அருகே மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய், பழம் ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம்!
கிடுகிடுவென உயர்ந்தது நேந்திர வாழையின் விலை..!பவானிசாகர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோட்டில் துண்டுப்பிரசுரம் வழங்கியதால் பரபரப்பு: 50 பேர் மீது வழக்குப் பதிவு
ஈரோட்டில்  இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது..!
கொல்லிமலை வனத்துறை சார்பில் ஈர நில நாள் தின விழா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : உழவர் சந்தை பகுதி மேம்படுத்தப்படும்- உறுதியளித்த தி.மு.க. வேட்பாளர்
ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு உச்ச பாதுகாப்பு..!