பரமத்திவேலூரில் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், வரும் 5-ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்
நாமக்கல் : ப.வேலுார்: நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், வரும், 5ல் இலவச கண் சிகிச்சை முகாம், ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறில் உள்ள சமுதாய கூடத்தில் நடக்கிறது.
இதில், ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடலில் உள்ள ரத்த கொதிப்பு அளவு, கண்ணில் பிரஷர் அளவு, கண்ணில் புரை, கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண் நீர் அழுத்த நோய், கண்ணில் நீர்ப்பை அடைப்பு, மாறுகண், கருவிழி புண், சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் பாதிப்பு, கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
கண் அறுவை சிகிச்சை
கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, திருச்செங்கோடு விவேகானந்தா கண் மருத்துவமனைக்கு, நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் அழைத்து சென்று இலவசமாக கண் அறுவை சிகிச்சை நடக்கிறது. பஸ் வசதி, மருந்துகள், கண் கண்ணாடி, உணவு வசதி அனைத்து ஏற்பாடுகளையும், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவசமாக நடக்கிறது.முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu