ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு உச்ச பாதுகாப்பு..!

ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு உச்ச பாதுகாப்பு..!
X
ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு உச்ச பாதுகாப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடக்கிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை

இதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மதியம் முன்னணி விவரமும், மாலை வெற்றி நிலவரமும் தெரியவரும்.

5 அடுக்கு பாதுகாப்பு

ஓட்டு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஓட்டு எண்ணும் நாளில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இது குறித்து போலீசார் கூறும்போது, ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 5-ந் தேதி மாலை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் என 5 அடுக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள்

5-ந் தேதி முதல் 7-ந் தேதி நள்ளிரவு வரை கணிசமான அளவு போலீசார் பணியை தொடர்வார்கள். 8-ந் தேதி போலீசார் எண்ணிக்கை அதிகாலையிலேயே அதிகரிக்கப்படும்.

Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!