தைப்பூசம் எதிரொலியாக சரிந்தது முட்டை விலை..!
நாமக்கல் : நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 505 காசுக்கு விற்ற முட்டை விலை, 20 காசு குறைத்து, 485 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
காரணம் தைப்பூசமா?
விரைவில் தைப்பூசம் வருவதால், தமிழகத்தில், முட்டை நுகர்வு சரிந்துள்ளது. வடமாநிலங்களில் குறைக்கப்பட்டுள்ளதாலும், கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கொள்முதல் விலை, 20 காசு குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்
சென்னை - 560
ஐதராபாத் - 460
விஜயவாடா - 500
பர்வாலா - 442
மும்பை - 535
மைசூரு - 535
பெங்களூரு - 535
கொல்கத்தா - 530
டில்லி - 470
நாமக்கல்லில் முட்டைக்கோழி விலையில் மாற்றம் இல்லை
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் கறிக்கோழி விலையிலும் மாற்றமில்லை
இதேபோல், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu