ஆசனூரில் பழங்குடியினருக்கான பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்!

ஆசனூரில் பழங்குடியினருக்கான பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்!
X

பழங்குடியினருக்கான பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் வனக்கோட்ட துணை இயக்குநர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு துறை சார்பாகவும் செய்யப்படும் அரசு திட்டங்கள், பயனாளிகளின் தகுதிகள், நிதியுதவி விபரங்கள், தனிநபர் மற்றும் குழுக்களுக்கான திட்டங்கள், இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் போன்ற விபரங்களை தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

பின்பு தனிநபராகவும், குழுக்களாகவும் தொழில் தொடங்குவதற்கான விருப்பங்களை குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அவற்றில், பழங்குடியினருக்கு நிலம் வாங்கித் தருதல், தேநீர் கடை மற்றும் உணவகம் அமைத்தல், அழகு கலை நிலையங்கள், தேனீ எரிவாயு இணைப்பு, ஓட்டுநர் உரிமம், தேனீ வளர்ப்பு பயிற்சி, தையற்கலை பயிற்சி, ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி ஆகியவை அடங்கும். இக்கோரிக்கைகள் அனைத்தும் மேற்படி துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டம் வாரியாக தொகுக்கப்பட்டு பட்டியல் தயாரித்து அத்துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் முன்னேற்றம் குறித்தான ஆய்வுக் கூட்டம் அடுத்த மாதம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் ஆசனூர் சூழல் மேம்பாட்டு சரக வனச்சரக அலுவலர் வெங்கடாசலம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல் அலுவலர் சதீஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜுன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திருமுருகன். மத்திய பழங்குடியினர் அமைச்சகம்-இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு பொது மேலாளர் (ஓய்வு) ராமநாதன், சுடர் அமைப்பு நிறுவனர் நடராஜ், ஆசனூர் சூழல் மேம்பாட்டு சரக வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறை களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் 21 சூழல் மேம்பாட்டு குழுக்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?