ஈரோடு தனியார் கல்லூரி விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பங்கேற்பு

ஈரோடு தனியார் கல்லூரி விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பங்கேற்பு
X

தனியார் பொறியியல் கல்லூரி விழாவில், முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்று பேசினார்.

ஈரோடு அருகே மேட்டுக்கடை கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்றார்.

ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்றார்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு - பெருந்துறை சாலையில் மேட்டுக்கடை அருகே ஆண்டவர் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சூர்யா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணாக்கர்களின் வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) இன்று நடைபெற்றது. விழாவிற்கு, அறக்கட்டளை தலைவர் ஆண்டவர் ஏ.ராமசாமி தலைமையேற்று, தலைமையுரை ஆற்றினார்.


விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கலந்துகொண்டு மாணாக்கர்களின் வாழ்க்கைக்கான குறிக்கோள்களை கல்லூரி கல்வியை துவங்கும் போதே தெரிவு செய்து கொள்ளும்படி கூறினார். மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்களையும் நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார்.


இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் மனோகரன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் மற்றும் தாளாளர் கலைச்செல்வன், பொருளாளர் கேசவன், துணைத் தலைவர் இளங்கோ, இணைச்செயலாளர் சஞ்சீவ் குமார், இயக்குனர்கள் முனைவர் சுவாமிநாதன், கலையரசன், சென்னியப்பன், மற்றும் பிரேம் பிரகாஷ் சிக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில், முதலாமாண்டு துறைத் தலைவர் சியாமளாவின் நன்றி கூறினார்.

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ. இறையன்பு சிறந்த பேச்சாளர் மட்டும் அல்ல எழுத்தாளரும் கூட. அவர் தனது பணிக்காலத்தில் கூட பல நிகழ்ச்சிகளில் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இந்நிலையில் தற்போது பணி நிறைவு பெற்றதால் மாணவர்களின் எதிர்காலம் கருதி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கேற்று வருவது பாராட்டுக்குரியதாக உள்ளது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!