குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசிய அரசு பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க புகார்..!

குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசிய அரசு பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க புகார்..!
X
குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசிய அரசு பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க புகார்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

பவானி அடுத்த புதுநகரம் பகுதியை சேர்ந்த கண்ணன் ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்திருந்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

பெண் ஊழியரின் சர்ச்சை பேச்சு

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கேசரிமங்கலத்தில் பணிபுரிந்து வரும் அரசு பெண் ஊழியர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை குறிப்பிட்டு தொட்டலே தீட்டு என்றும் மற்றொரு சமுதாயத்தின் பெயரை குறிப்பிட்டு பார்த்தாலே தீட்டு என்றும் தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட சமுதாயத்தின் மனவேதனை

இதனால் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த நாங்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம். எனவே, குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய அரசு பெண் ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய அரசு பெண் ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கண்ணன்

இவ்வாறு பவானி அடுத்த புதுநகரம் பகுதியை சேர்ந்த கண்ணன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு பெண் ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Tags

Next Story