ஈரோடு: மொடக்குறிச்சியில் உள்ள சத்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X
By - S.Gokulkrishnan, Reporter |13 Jun 2022 6:00 PM IST
மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட கஸ்பாபேட்டை சத்தீஸ்வரர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட கஸ்பாபேட்டையில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சத்தீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் உள்ளே தையல் நாயகி, சண்டிகேசுவரர், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சாமி சிலைகள் உள்ளன. கற்களால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு இன்று கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu