ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..! | Thulasi Benefits In Tamil

Thulasi Benefits In Tamil
X

Thulasi Benefits In Tamil

Thulasi Benefits In Tamil - துளசி மூலிகைச் செடியாகும் இதன் நன்மைகள் , பயன்கள் அனைத்தும் இத்தொகுப்பில் காணலாம்.


துளசியின் மருத்துவ குணங்கள்

துளசியின் மருத்துவ குணங்கள்

Thulasi Benefits In Tamil - சளிக்கு டாக்டர் கிட்ட போறீங்களா? மாச கணக்குல மாத்திரை மருந்து சாப்பிடுறீங்களா? அது இனி பண்ணாதீங்க. நம்ப வீட்டுல இருக்க துளசி எடுத்து தினம் மென்று சாப்பிடுங்க, சளி காணாம போய்டும்.

நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.

துளசி மூலிகைச் செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.

1. மூலிகைகளின் அரசி

துளசி கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை "மூலிகைகளின் அரசி" என்கிறார்கள்.

நோய் வருமுன் காத்து வந்த நோயை விரட்டி எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.

சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது.

2. காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து | Thulasi Benefits In Tamil

மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது. எந்த காய்ச்சலாக இருந்தாலும் துளசியிடம் இருக்கிறது தீர்வு.

ஏற்கனவே வைரஸ் காய்ச்சல், ஜப்பானியர்கள், என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.

3. இருமல் இல்லாமல் செய்துவிடும்

சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன் உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு.

துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.

4. ரத்த அழுத்தம் குறையும் | Thulasi Uses In Tamil

இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றை சொல்லலாம்:

  • 'நீரிழிவு' என்ற சர்க்கரை நோய்
  • 'ஒபிசிட்டி' என்ற உடல் பருமன்
  • 'பிளட் பிரசர்' என்ற ரத்த அழுத்தம்

துளசி இலை முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

5. தோல் நோய் தொல்லை, இனி இல்லை

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.

துளசி இலையுடன் அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

6. என்றும் இளைமை | Thulasi Uses In Tamil

என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும்.

இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.

7. உடலுக்கான கிருமிநாசினி

துளசி அதி அற்புதமான கிருமிநாசினி. வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி.

தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றம் இருக்கவே இருக்காது.

Tags

Next Story