/* */

போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 26 வாகனங்களுக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

ஈரோடு கிழக்கு மண்டல போக்குவரத்து அலுவலர் பதுவை நாதன் தலைமையில் வாகனத் தணிக்கை நடந்தது.

HIGHLIGHTS

போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 26 வாகனங்களுக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்
X

பைல் படம்

போக்குவரத்து விதிகளை மீறிய 26 வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதித்து மாவட்ட போக்குவரத்து அலுவலர் படுவைநாதன் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு தூய்மை வார விழா மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு வட்டார போக்குவரத்து துறையினர் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு சரகம் கீழ தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.ஈரோடு கிழக்கு மண்டல போக்குவரத்து அலுவலர் பதுவை நாதன் தலைமையில் தணிக்கை நடந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற 85 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் நிறுத்தி தணிக்கை செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறி 20 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விதிகளை மீறிய 20 ஆம்னி பஸ்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், 200க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை தணிக்கை செய்ததில், 6 வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரூ. அந்த 6 சரக்கு வாகனங்களுக்கும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், ரூ. மொத்தம் 26 வாகனங்களுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் அதிக பாரம் ஏற்றாமல் இருக்கவும், சீட் பெல்ட் அணியவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Updated On: 15 Jan 2023 6:15 AM GMT

Related News