அந்தியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம்

அந்தியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம்
X

அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (பிப்.1) நடைபெற்றது.

அந்தியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (பிப்.1) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் சின்னத்தம்பி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட அந்தியூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காச நோய் சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதின் அவசியம், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் பொது மக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சக்தி கிருஷ்ணன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சண்முகம், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காசநோய் சிகிச்சை பார்வையாளர் சண்முகவடிவு, ஆய்வக நுட்புநர் தேவி அபிராமி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 95 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
அந்தியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம்
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
மாநில அரசுகளுக்கு துணைவேந்தா் நியமன அதிகாரம் – மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல்
பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க அ.தி.மு.க. கவுன்சிலர்களின் எதிர்ப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவு!
த.வெ.க., நிர்வாகிகளுக்கு எதிராக திராவிடர் விடுதலைக்கழகத்தைச் சார்ந்த புகார்
டிராக்டர் மோதி சரக்கு ஆட்டோ, கார் சேதம்..!
கொல்லிமலையில் விபத்தை குறைக்கும் 10 கோடி திட்டம் – ரப்பர் தடுப்பான்கள் அமைப்பு
பைக் திருட்டு: மார்க்கெட் பகுதியில் பயங்கர சம்பவம்..!
நாமக்கல் புத்தக திருவிழாவில் பத்து நாட்கள் கலாச்சாரம் மற்றும் அறிவின் சிறப்பு காணொளி
கரூர் - ஈரோடு பாதையில் எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில் சேவை ரத்து: பயணிகள் கவலை..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : விதிமுறைகளை மீறியதாக 18 வழக்குகள் பதிவு
வானவில் மன்ற பயிற்சி முகாமில் அறிவியலுக்கான வித்தியாசமான அணுகுமுறை
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!