கரூர் - ஈரோடு பாதையில் எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில் சேவை ரத்து: பயணிகள் கவலை..!
கரூர் - ஈரோடு தடத்தில் புகழூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதன் காரணமாக சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி - ஈரோடு பயணியர் ரயில்
திருச்சி - ஈரோடு பயணியர் ரயில், இன்று, வரும் 3 மற்றும் 6ஆம் தேதிகளில் காலை 7:20 மணிக்கு கிளம்பி, கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் தேதிகள் மாற்றங்கள்
திருச்சி - ஈரோடு பயணியர் ரயில் இன்று, 3, 6 கரூர் வரை மட்டும் இயக்கம். கரூர் - ஈரோடு ரத்து
செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ்
இன்று, வரும் 3 மற்றும் 6ஆம் தேதிகளில், செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும், கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் தேதிகள் மாற்றங்கள்
செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் இன்று, 3, 6 இரு மார்க்கத்திலும் கரூர் - ஈரோடு ரத்து
திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ்
இன்று கிளம்பும் திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் முதல் பாலக்காடு வரை, பணி முடிந்த பின்னர் இயக்கப்படும்.
ரயில் தேதி மாற்றங்கள்
திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் இன்று கரூர் வரை மட்டும் இயக்கம். கரூர் - பாலக்காடு பணி முடிந்த பின் இயக்கம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu