சன்னியாசிபட்டி ஊராட்சியில் புதிய அலுவலகக் கட்டிட பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

சன்னியாசிபட்டி ஊராட்சியில் புதிய அலுவலகக் கட்டிட பணி பூமி பூஜையுடன்  தொடக்கம்
X

சன்னியாசிபட்டி ஊராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடம் பூமிபூஜையுடன் பணி தொடக்கம்.

பவானி அருகே உள்ள சன்னியாசிபட்டி ஊராட்சியில் ரூ.23.57 லட்சத்தில் புதிய அலுவலகக் கட்டிடம் பூமி பூஜையுடன் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், சன்னியாசிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதிய கட்டடம் ரூ.23.57 லட்சம் மதிப்பில் கட்டும் பணி நேற்று பூமிபூஜையுடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில், சன்னியாசிபட்டி ஊராட்சித் தலைவர் சித்திரசேன், பவானி ஒன்றிய கவுன்சிலர் கார்ஜோன் பி.சதீஷ்குமார் பூமிபூஜை செய்து கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தனர்.

பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.கோபாலகிருஷ்ணன், என்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிச் செயலாளர் அம்பிகா வடிவேல் வரவேற்றார். மகாத்மா காந்தி தேசிய வேலையுறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் இந்த அலுவலகம் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!