ஈரோட்டில் நவ.30ம் தேதி 108, 102, 1962 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் நவ.30ம் தேதி 108, 102, 1962 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்
X

ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்.

ஈரோட்டில் நவ.30ம் தேதி சனிக்கிழமை அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களான 108, 102, கால்நடை ஆம்புலன்ஸ் வாகனமான 1962ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

ஈரோட்டில் நவ.30ம் தேதி சனிக்கிழமை அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களான 108, 102, கால்நடை ஆம்புலன்ஸ் வாகனமான 1962ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கவின் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களால் 108, 102 மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனமான 1962ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நவ.30ம் தேதி சனிக்கிழமை காலை 11.30 முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

இதில், 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணராக பணிபுரிய, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் - ஏஎன்எம், டிஎம்எல்டி (பிளஸ் 2விற்கு பின், 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி. ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16,020 ரூபாய் மொத்த ஊதியமாக வழங்கப்படும்

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு 24 வயது முதல் 35 வயதிற்குள், 162.5 செ.மீக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் குறையாமல் இருக்க வேண்டும் மற்றும் பேட்ஜ் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,820 வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இதேபோல், 102 ஆம்புலன்சில், சுகாதார அதிகாரியாக பணிபுரிய, கல்வித்தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம் - ஏஎன்எம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு, 19 முதல், 30க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.18,000 ரூபாய் மொத்தமாக வழங்கப்படும்.

அதேபோல், 1962 கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓட்டுநர் பணிக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும்.வயது 24 முதல் 35 வரை, உயரம் 162.5 செ.மீ குறையாமல் இருக்க வேண்டும். லைசன்ஸ் எடுத்து 3 வருடம் நிறைவு பெற்று இருக்க வேண்டும். ஒரு வருடம் பேட்ஜ் நிறைவு எடுத்து வர வேண்டும்.

உதவியாளர் பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், எந்தவொரு பயிற்சி வகுப்பையும் முடித்த ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் ரூ.15,725 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மேலும், நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்கள் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் அவசியம் எடுத்து வர வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு, 044-28888060, 7397724813 , 73388 94971,89259 41108 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Similar Posts
ஈரோட்டில் நவ.30ம் தேதி 108, 102, 1962 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்
மொடக்குறிச்சி கணபதிபாளையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் கடன் பெற சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கொடுமுடியில் நூலகம், திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை திறந்து வைத்த முன்னாள் அரசு செயலாளர்கள்
குளிர்காலங்களில் அடிக்கடி வலி வருவது ஏன்? எப்படி தவிர்க்கலாம்?
மழைக்காலங்களில் மின்சார ஷாக்...! எப்படி தவிர்ப்பது..?
மஹிந்திராவின் புதிய கார் இந்தியாவுக்கு வந்துருச்சு , மஹிந்திரா XEV 9e எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி
கோபி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
கேன்சர் இருக்கவங்க கண்டிப்பா இத சாப்டுங்க!..அவ்ளோ நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய்ல..
புது வருசத்துல புது புது போன் வருது என்னென்ன போன் பாக்கலாம்
மழைக்காலத்தில் துணி,போர்வை காயவில்லை என்று கவலையா...? இனி எதுக்கு கவலை அதுதா வாஷிங் மெஷின் இருக்குல...!
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு