கொடுமுடியில் நூலகம், திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை திறந்து வைத்த முன்னாள் அரசு செயலாளர்கள்

கொடுமுடியில் நூலகம், திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை திறந்து வைத்த முன்னாள் அரசு செயலாளர்கள்
X

கொடுமுடி பேரூராட்சியில் மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முன்னாள் அரசு செயலாளர்கள் கிருஷ்ணன், சிவதாஸ் மீனா. உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை முன்னாள் அரசு செயலாளர்கள் கே.பி.கிருஷ்ணன், சிவதாஸ்மீனா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

கொடுமுடி பேரூராட்சியில் மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை முன்னாள் அரசு செயலாளர்கள் கே.பி.கிருஷ்ணன், சிவதாஸ்மீனா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி, வடக்கு தெருவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (நவ.28) நடந்தது.


மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், இந்திய அரசின் முன்னாள் அரசு செயலர் கே.பி.கிருஷ்ணன் (ஓய்வு) மற்றும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் தலைவர் சிவதாஸ் மீனா (ஓய்வு) ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சி பகுதியில் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கு இந்திய அரசின் முன்னாள் அரசு செயலர் கிருஷ்ணன் (ஓய்வு) நிலத்தினை வழங்கியுள்ளார்.


மேலும், நூலகம் அமைத்திட நமக்கு நாமே திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீத பங்குத் தொகையாக ரூ.55 லட்சத்தினை ஸ்ரீராம் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்., மற்றும் டாடா கன்சியூமர் உற்பத்தி நிறுவனம் லிமிடெட்., மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நூலகம் ரூ.1.10 கோடி மதிப்பில் தரைதளம், முதல்தளம் என 2060 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கொடுமுடி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கற்றல் மையத்துடன் கூடிய நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்நூலகமானது கொடுமுடி பகுதி மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இதில் அறிவியல், விஞ்ஞானம், இலக்கியம், கதைகள், அறிவியல், ஆளுமை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த நூலகமானது, இளைஞர்களுக்கும். பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்விற்கு தயாராவதற்கு ஏதுவாக அமையும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பெருந்துறை, சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிகளில் அறிவுசார் மையங்கள் கட்டப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.


நூலகங்களாக மட்டுமல்லாமல், திறன் மேம்பாட்டு மையங்களாக அமைந்துள்ளது. எனவே, இளைஞர்கள், பொதுமக்கள். மாணவ, மாணவியர்கள் என அனைவரும் இதுபோன்ற நூலகங்களை பயன்படுத்தி தங்கள் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதோடு. எதிர்காலத்தில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, தொழிலதிபர்கள் போன்ற உயர்ந்த நிலைகளை எட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராம் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்., நிறுவன செயலர் செந்தில்நாதன், டாடா கன்சியூமர் உற்பத்தி நிறுவனம் லிமிடெட்., நிறுவன செயலர் டெல்னாஸ் ஹர்டா, ஈரோடு யுஆர்சி கட்டுமான நிறுவன மேலாண்மை இயக்குநர் தேவராஜன், கொடுமுடி எஸ்எஸ்வி கல்வி நிறுவனங்கள் தலைவர் அருள், கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story
Similar Posts
ஈரோட்டில் நவ.30ம் தேதி 108, 102, 1962 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்
மொடக்குறிச்சி கணபதிபாளையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் கடன் பெற சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கொடுமுடியில் நூலகம், திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை திறந்து வைத்த முன்னாள் அரசு செயலாளர்கள்
குளிர்காலங்களில் அடிக்கடி வலி வருவது ஏன்? எப்படி தவிர்க்கலாம்?
மழைக்காலங்களில் மின்சார ஷாக்...! எப்படி தவிர்ப்பது..?
மஹிந்திராவின் புதிய கார் இந்தியாவுக்கு வந்துருச்சு , மஹிந்திரா XEV 9e எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி
கோபி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
கேன்சர் இருக்கவங்க கண்டிப்பா இத சாப்டுங்க!..அவ்ளோ நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய்ல..
புது வருசத்துல புது புது போன் வருது என்னென்ன போன் பாக்கலாம்
மழைக்காலத்தில் துணி,போர்வை காயவில்லை என்று கவலையா...? இனி எதுக்கு கவலை அதுதா வாஷிங் மெஷின் இருக்குல...!
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு