/* */

பவானி அருகே தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு

பவானி அருகே வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது சிறுவன் ஸ்ரீநேஷ் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பவானி அருகே தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு
X

பவானி அரசு மருத்துவமனை.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே எலவமலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கட்டுமான தொழிலாளியான இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகன் கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தாய் ரேவதி இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் குழந்தை விளையாடி கொண்டிருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து இரண்டாவது குழந்தையான ஒன்றரை வயது ஸ்ரீநேஷ் விளையாடி கொண்டிருந்த இடத்தில் இருந்து சத்தம் வராதையடுத்து தாய் ரேவதி எட்டிப்பார்த்த போது குழந்தை ஸ்ரீநேஷ் வீட்டில் தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


உடனடியாக குழந்தைக்கு எடுத்துக் கொண்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 2 July 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை