/* */

கொலை வழக்கில் பெண் வெட்டிக் கொலை: பழிக்கு பழியாக திண்டுக்கல்லில் நடந்த கொடூரம்

கொலையாளிகள் பெண்ணின் தலையை பசுபதி பாண்டியன் வீட்டில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்

HIGHLIGHTS

கொலை வழக்கில் பெண் வெட்டிக் கொலை: பழிக்கு பழியாக  திண்டுக்கல்லில்  நடந்த கொடூரம்
X

திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட நிர்மலா

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் நந்தவன பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் தலை துண்டித்து இன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

வேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதிபாண்டியன், திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10--ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில், தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், புறா மாடசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துப்பாண்டி, நிர்மலா உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், புறா மாடசாமி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 4 பேர் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், பசுபதி பாண்டியன் கொலை செய்ய வந்த கொலையாளிகளுக்கு நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் வசித்த பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து கொடுத்து உதவியதாக நந்தவனப்பட்டி நிர்மலா ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை 18.10.2021 -ஆம் தேதியிலிருந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வருகிறது .

இந் நிலையில், நிர்மலா இன்று திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஈபி காலனி பகுதியில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு பணிகளை பிரித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், நிர்மலாவை பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து, தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்றனர்.

பின்னர் கொலையாளிகள், வெட்டப்பட்ட பெண்ணின் தலையை, நந்தவனப்பட்டியில் கொலை செய்யப்பட்ட பசுபதிபாண்டியன் வீட்டில், அவரது பிளக்ஸ் பேனர் அருகே வைத்து விட்டு சென்று தப்பிச்சென்று விட்டனர் . இது குறித்து தகவல் அறிந்தத திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 22 Sep 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்