/* */

கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் தினம் அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறுது.

HIGHLIGHTS

கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது
X

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுவதற்கு முன்பு 40 நாட்கள் இரவும் பகலும் நோன்பிருந்தார். இயேசுவை கிறிஸ்துவை பின்பற்றும் விதமாக கிறிஸ்தவர்கள் வருடத்தில் 40 நாட்கள் நோன்பு மேற்கொள்வர், இது தவக்காலம் என்று அழைக்கப்படும். இந்த தவக்காலத்தின் முதல் நாளான இன்று (17.02.2021) சாம்பல் புதன் (திருநீற்றுப் புதன், விபூதி புதன்) என்று கூறுவர்.


ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவ தேவாலயத்தில் தவக்காலத்தில் குருத்து ஞாயிறன்று வழங்கப்படும் தென்னங்குருத்துகளை மக்கள் வாங்கி சென்று தங்களது வீடுகளில் சிலுவை போன்ற அமைப்பில் செய்து அதனை பாதுகாப்பார்கள், தவகாலம் துவங்குவதற்கு முன் அந்த குருத்தோலைகளை பெற்று தேவாலயத்தில் மந்திரித்து அதனை எரித்து சாம்பலாக மாற்றி தேவாலய பாதிரியார்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் 40 நாட்களும் இந்த சாம்பலை அவர்களின் நெற்றியில் இட்டுக் கொள்வர்.


அவ்வாறு இன்று திண்டுக்கல் மாவட்டம் புனித வளனார் தேவாலயத்தில் சாம்பல் புதன் பூசை திருப்பலி நடைபெற்றது. ஆயர் ஆபேல், தேவாலய பங்கு தந்தையர்கள் சகாய ராஜ், ஜெயசீலன், ஜெபராஜ், அந்தோனி சாமி ஆகியோர் திருப்பலி பூசை வைத்து தவக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பூசைகள், ஜெபம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் திருப்பலி முடிந்தவுடன் மக்களுக்கு சாம்பல் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாம்பல் புதனை உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், லுத்தரன் திருச்சபையினர் கடைபிடிப்பர்.

Updated On: 17 Feb 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குந்தவை த்ரிஷாவின் அழகு ரகசியம்..! பிட்னஸ் டிப்ஸ்..!
  2. தொழில்நுட்பம்
    2024 இல் வாங்குவதற்கு சிறந்த கேமரா அமைப்புகளுடன் கூடிய
  3. கோவை மாநகர்
    சூலூர் அருகே 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. தமிழ்நாடு
    துன்பத்தில் ஒரு மகிழ்ச்சி : விழுப்புரத்தில் ஒரு சோக கதை..!
  5. லைஃப்ஸ்டைல்
    பரோட்டா பிரியரா நீங்க? - இந்த உண்மைகள் தெரிஞ்சா பரோட்டா பக்கமே போக...
  6. வீடியோ
    🔴LIVE : சென்னையில் EV சார்ஜிங் நிலையம் அறிமுக நிகழ்ச்சி || #ev...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் அடிக்கடி முகம் கழுவுபவரா நீங்க...?
  8. சினிமா
    தனியா உக்காந்து பாத்துடாதீங்க..! அப்றம் பயந்து போயிடுவீங்க..!
  9. வீடியோ
    எனக்கு இப்படி ஒரு படம் கெடச்சது சந்தோசம் Vani Bhojan ! |#anjaamai...
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையாரை தரிசனம் செய்த அண்ணாமலை