குந்தவை த்ரிஷாவின் அழகு ரகசியம்..! பிட்னஸ் டிப்ஸ்..!
Trisha Krishnan Beauty Tips-நடிகை த்ரிஷா (கோப்பு படம்)
Trisha Krishnan Beauty Tips
நடிகை த்ரிஷா தமிழில் 1999ம் ஆண்டில் வெளிவந்த ஜோடி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் 2002ம் ஆண்டில் மௌனம் பேசியதே, 2003ம் ஆண்டில் சாமி, 2004ல் கிள்ளி என தொடர் வெற்றி நாயகியாக தொடர்ந்தார்.தெலுங்கு படங்களிலும் நடித்து பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.
Trisha Krishnan Beauty Tips
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் பிபிஏ படம் பெற்றுள்ளார். மாடலிங் துறையில் இருந்த த்ரிஷா, 1999ம் ஆண்டில் மிஸ் சேலம் பட்டத்தை வென்றார். பின்னர் அதே ஆண்டில் மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றார். 2001ம் ஆண்டில் மிஸ் இந்தியா பட்டத்தை வென்று அகில இந்திய அளவில் ரசிகர்களின் பார்வையைப் பெற்றார். 'அழகான புன்னகை' விருதும் அவரது சிரிப்பின் அழகுக்கு கிடைத்தது.
த்ரிஷாவின் சினிமா பயணத்தில் இடையில் ஒரு சிறிய தொய்வு அல்லது சிறிய தேக்கம் இருந்தது. ஆனாலும் 96 என்ற படத்தின் மூலமாக 'மீண்டும் நான் வந்திட்டேன்' என்று ரீ என்ட்ரி கொடுத்தார்.
2022 மற்றும் 2023ம் ஆண்டில் வெளிவந்த பொன்னியின் செல்வன் இரண்டு பகுதியிலும் குந்தவையாக நடித்து தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாமல் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படித்த அல்லது ரசித்த அத்தனை பேரின் உள்ளங்களிலும் குடிகொண்டார். அந்த படத்தின் மூலமாக உலக அளவில் பேசப்பட்டார்.
Trisha Krishnan Beauty Tips
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் குந்தவை என்றால் த்ரிஷா என்கிற நிலைக்கு உயர்ந்தார். 41 வயதாகியும் இன்னும் அவரது அழகில் சிறிய மாற்றமும் இல்லாமல் இளமையை அப்படியே வைத்திருக்கிறார். அதற்கு அவரது அழகை இளமையை அப்படியே வைத்திருப்பதற்கு அவர் என்ன ரகசியம் வைத்துள்ளார் என்பதை பார்க்கலாம் வாங்க.
நீங்களும் அவரது அழகு குறிப்புகளை பின்பற்றுங்க. த்ரிஷா போல அழகு ராணியாக மாறுங்க. வயதிலும் அழகில் ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம் என்ன? சரும பராமரிப்புக்கு என்ன செய்கிறார்? ஃபிட்னஸ் எப்படி தக்கவைக்கிறார் என்பதை பார்க்கலாம் வாங்க.
சரும பராமரிப்பு
காலை எழுந்தவுடன் த்ரிஷா வெந்நீரில் கிரீன் டீ எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். மாலை வேளையில் மாதுளை ஜூஸ். மதிய நேரத்தில், உணவுக்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு ஜுஸ் குடிக்கிறார். ஆரஞ்சு உடலுக்கு நீர்ச்சத்தை அளிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவுவதாக கூறுகிறார். இன்னொரு முக்கியமான விஷயம் அல்லது ரகசியம் த்ரிஷாவின் இளமை தோற்றத்துக்கு முக்கிய காரணம் அவர் பயன்படுத்தும் சுக்கு பொடி என பிரபலமான ஒருவர் பேட்டியில் கூறி உள்ளார். சுக்கு பொடியை வெந்நீரில் கொட்டி அதில் சிறிதளவு தேன் கலந்து காலை வேளைகளில் குடிப்பதாக கூறியுள்ளார்.
Trisha Krishnan Beauty Tips
த்ரிஷாவின் டயட் பிளான் எப்படி என்று பார்க்கலாம்
த்ரிஷா எப்போதுமே வெளி உணவுகளை சாப்பிடுவது இல்லை. அதிக உப்பு சேர்க்கப்பட்ட துரித உணவுகளை கிட்டத்தில் கூட வரவிட மாட்டாராம். எங்கு ஷூட்டிங் போனாலும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே பேக் செய்து எடுத்துச் செல்வாராம். புரொடக்ஷன் தரப்பில் உணவுகள் தந்தாலும் அதை தவிர்த்துவிடுவாராம். உணவில அடிக்கடி எண்ணெய் சேர்க்காத ஆம்லெட், புரோட்டா போன்றவை உண்பார். காலை உணவாக பெரும்பாலும் பழங்கள் மற்றும் ஜூஸ்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். அரிசி உணவு அளவுடன் சேர்க்கிறார்.
Trisha Krishnan Beauty Tips
த்ரிஷாவின் ஃபிட்னஸ் எப்படி
உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்து கொல்வதற்கு த்ரிஷா சைக்கிளிங் செய்கிறார். அதே போல் அடிக்கடி ஸ்விம்மிங் செய்கிறார். மேலும் மன அமைதி மற்றும் மன அழுத்தம் போன்றவை நீங்க யோகா பயிற்சி மேற்கொள்கிறார். இந்த பயிற்சிகளை ஒருநாளும் மிஸ் செய்யாமல் அன்றாடம் செய்கிறார். இதுவே அவரின் அழகுக்கான காரணம்.
Trisha Krishnan Beauty Tips
த்ரிஷா கிருஷ்ணனின் அழகு ரகசியங்கள், புத்துணர்ச்சி மற்றும் பொலிவான சருமத்துக்கு என்ன செய்கிறார்? (சுருக்கமாக)
- எப்பொழுதும் நீரேற்றமாக இருப்பது. த்ரிஷா தன்னை நேரேற்றமாக வைத்துக்கொல்வதற்கு நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
- பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவுகளை உட்கொள்கிறார்.
- வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுக்கிறார். குறிப்பாக காலையில் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது வழக்கம்.
- ஜங்க் உணவை முற்றிலும் தவிர்க்கிறார்.
- ஒழுக்கமான, முறையான வாழ்க்கை முறைகளை பின்பற்றுகிறார்.
Trisha Krishnan Beauty Tips
வழக்கமாக தொடர்ந்து உடற்பயிற்சிசெய்வது , சீரான உணவு பழக்கம் இவைகளோடு போதுமான தூக்கம் மற்றும் யோகா செய்வது போன்ற தன்னை கவனிக்கும் (சுய-கவனிப்பு) நடைமுறைகளில் த்ரிஷா சமரசம் செய்துகொள்வதில்லை. தன்னுடைய அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்கு அயராத அர்ப்பணிப்பு அவரது இளமை தோற்றத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் காரணமாக இருக்கிறது.
ஃப்ரீஹேண்ட் பயிற்சிகள் மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகளை அவரது வழக்கமான பயிற்சிகளில் ஒன்றாக செய்து வருகிறார். இதுவே அவரை ஃபிட்டாக இருக்கவும் ஆரோக்கியமான உடலை பராமரிக்கவும் பெரும் உதவியாக இருக்கிறது. அதே சமயம் அவரது புன்னகை முகம் மேலும் அவரை அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu