/* */

தர்மபுரியில் உலக தாய்ப்பால் வார உறுதிமொழியேற்பு கலெக்டர் திவ்யதர்சினி பங்கேற்பு

தர்மபுரியில்உலக தாய்ப்பால் வார உறுதிமொழியேற்பு கலெக்டர் திவ்யதர்சினி பங்கேற்பு

HIGHLIGHTS

தர்மபுரியில் உலக தாய்ப்பால் வார உறுதிமொழியேற்பு  கலெக்டர் திவ்யதர்சினி பங்கேற்பு
X

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி தர்மபுரியில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தையொட்டி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழியேற்று கொண்டனர். இதில் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் மலர்விழி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் தாய்ப்பால் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து சர்வதேச அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் இடையே தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது.

எனவே பிரசவித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஒரு வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும். அதன்மூலம் குழந்தைகளின் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் சராசரியை கூடுதலாக இருக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். முன்னதாக விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Updated On: 11 Aug 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு