/* */

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு: வாகன ஒட்டிகள் அவதி

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு வாகன ஒட்டிகள் அவதி.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு: வாகன ஒட்டிகள் அவதி
X

அரூர் அருகே கொளகம்பட்டி பகுதியில் பனிப்பொழிவு காரணமாக முகப்பு விளக்கு எரிய விட்டபடி வரும் வாகன ஓட்டி.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு வாகன ஒட்டிகள் அவதி.

தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால் கார்த்திகை மாதம் தொடங்கி ஒரு வாரமாகியும் பனி வரவில்லை. வடகிழக்கு பருவமழையால் தொடர் மழை பெய்து வந்தது. கடந்த வாரம் வரை தொடர் மழை இருந்து வந்தது.

தற்போது, கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால் பனி பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், நெருப்பாண்டகுப்பம், அக்ராகரம், எட்டிப்ட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.

அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

Updated On: 8 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?